ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் டாக்டர் ஹன்சக விஜேமுனி பதில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுவிசர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் உலக சுகாதார அமைப்பின் 78ஆவது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ சுவிசர்லாந்து சென்றுள்ளதால் அவர் நாடு திரும்பும் வரை செயலாற்றுவதற்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.