பதுளை, கொஸ்லாந்தை, பூனாகலை வனப்பகுதியில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை (27.06) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டதுடன், ஐம்பது ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த பகுதியில் நிலவும் வரட்சியான வானிலை மற்றும் காற்றின் வேகத்தால் தீ வேகமாகப் பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பூனாகலை மலைத் தொடரின் சரிவுகளில் கொஸ்லாந்தை மற்றும் வெல்லவாய நோக்கி தீ பரவி வருவதுடன், இன்று வெள்ளிக்கிழமை (28.06) காலை வேளையிலும் தீ பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post Views: 2