பதுளை, எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹல்பே பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெத்தேவெலவிலிருந்து பண்டாரவளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த சுவரில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும், விபத்தின் போது பேரூந்தில் 18 பேர் பயணித்துள்ளதோடு அவர்களில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தெமோதரை வைத்தியசாலையில் காயமடைந்தவர்களை அனுமதித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Post Views: 2