பதுளை நகரைச் சுற்றியுள்ள பகுதியில் காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் இன்று (5) அறிவித்துள்ளது.
இது தொடர்பில் பதுளை போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாவது,
தற்போது நாட்டில் மூடுபனி, நச்சுப் புகை பரவல் காரணமாக இதய நோய், சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் முதியவர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, பொதுமக்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் தெரிவித்துள்ளார்.