November 17, 2025
பத்தாம் திகதி முதல் தோட்டதொழிலாளருக்கு  1700 சம்பளம்!
புதிய செய்திகள்

பத்தாம் திகதி முதல் தோட்டதொழிலாளருக்கு 1700 சம்பளம்!

Jun 4, 2024

தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் தொடர்பாக  நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் நீதி மன்றம் இடைக்கால உத்தரவு வழங்காது தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் வழங்க தீர்மானித்துள்ளது.

இதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று முறியடித்துள்ளது.

நீதித்துறையின் இச்செயற்பாடானது மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஆதரவு வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இவ்வழக்கில் வாதாடிய சட்டத்தரணிகள் மற்றும் சம்பள நிர்ணய சபை, தொழில் அமைச்சின் உத்தியோகஸ்தர்கள், அரசாங்கம் உட்பட அனைத்து தரப்பினருக்கும் இ.தொ.கா சார்பில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் தோட்ட தொழிலாளர்களுக்கு இம்மாதம் 10 ஆம் திகதி 1700 ரூபாய் சம்பளம் கட்டாயம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *