அமெரிக்காவின் தெற்கு மாகணங்களான புளோரிடா, மிசிசிப்பி, லூசியானா ஆகிய இடங்களில்  கடுமையாக பனி பொழிந்து வருகிறது. இந்தநிலையில் புளோரிடா மாகாணத்தில் கடந்த 2  நாட்களாக கடும் பனிப்பயுல் வீசி வருகிறது.

மைனஸ் 20 டிகிரி வானிலையுடன் கடுமையான பனிப்புயல் காரணமாக அங்குள்ள முக்கிய நகரங்களை வெள்ளை பனி மூடியுள்ளது.

குறிப்பாக புளோரிடாவில் உள்ள மில்டன் நகரம் துருவ கண்டம்போல காட்சியளிக்கும் வகையில் பனிபொழிந்து வருகிறது.

இப் பனிப்புயல் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். 3கோடிமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில மாகணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் அந்த நாட்டின்பாடசாலைகள், கல்லூரிகள் மூடப்பட்டன, வீதி மற்றும் ரயில் போக்குவரத்து பொதுச்சேவை குறைக்கப்பட்டது. ஹவுஸ்டன், கூல்ப்போர்ட், டல்லாயாசி, மொபில் உள்ளிட்ட நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டன.இதனால் 2 ஆயிரம் விமானங்கள் இரத்தாகியுள்ளன.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here