பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் இந்து மத குருக்களை சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க.
இன்று (17.08) காலை ஆலயத்திற்கு சென்று எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் வெற்றிக்காக அவர்களின் ஆசிகளை பெற்றுக்கொண்டதுடன் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து மதகுருமார்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
மேலும், இச்சந்திப்பில் தேசிய மக்கள் படையின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி அவர்களும் இணைந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.