பலாங்கொடையிலிருந்து கண்டி நோக்கி பயணித்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தின் பின் சக்கரங்களின் ஆணிகள் லுாசாகி நடக்கவிருந்த பெரும் விபத்தை பேருந்து சாரதி தடுத்துள்ளார்.
அப்போது பேருந்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பலாங்கொடை டிப்போவிற்குச் சொந்தமான அந்த பேருந்தின் சாரதியாக அஜித் குமார கடமையாற்றியதாகவும் அவரின் சாமர்த்தியத்தால் விபத்து தடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் அவர் சக்கரங்களை சரிபார்த்தபோது, பின் சக்கரங்களின் ஆணிகள் லுாசாகி இருந்ததை அவதானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post Views: 2