இந்திய பிரீமியர் லீக்கில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராகவும், வழிகாட்டியாகவும் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்து முடிந்த ஐபிஎல் தொடருடன் தினேஷ் கார்த்திக் ஓய்வை அறிவித்திருந்தார்.
இந்த ஆண்டு 15 போட்டிகளில் 36.22 சராசரியில் இரண்டு அரைச்சதங்கள் உள்ளடங்களாக 187.35 ஸ்டிரைக் ரேட்டுடன் 326 ஓட்டங்களை குவித்திருந்தார்.
எனினும், அரையிறுதியுடன் பெங்களூரு அணி வெளியேறியிருந்தது. இதனையடுத்து தினேஷ் கார்த்திக் தனது ஓய்வை அறிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே, பெங்களூரு அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராகவும், வழிகாட்டியாகவும் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
Post Views: 2