January 20, 2026
பரிதாபகரமாக உயிரிழந்த 5 வயது சிறுவன்..!
News News Line Top Updates புதிய செய்திகள்

பரிதாபகரமாக உயிரிழந்த 5 வயது சிறுவன்..!

Mar 25, 2024

யாழ்ப்பாணம்  அராலி மத்தியில் ஆஸ்துமாவுக்கு உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ளாத நிலையில் நேற்றையதினம்(24)  5 வயதுடைய  சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

கிருபாகரன் சுலக்சன் என்ற சிறுவனே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் ஆஸ்துமாவால் கடந்த ஒரு வார காலமாக அவதிப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்த்து பெற்றோர் மருந்து எடுத்துள்ளனர்.

இருப்பினும்  அவ் மருந்துகளை  சிறுவனுக்கு வழங்கவில்லை என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நேற்று அதிகாலை சிறுவன் நோயால் துடித்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும் உயிரிழந்துள்ளார்.

இவ் மரணம் தொடர்பான  விசாரணைகளை திடீர் இறப்புவிசாரணை அதிகாரி N.பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

பெற்றோர் சிறுவனுக்கு உரிய சிகிச்சையளித்திருந்தால் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *