Tamil News Channel

பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் மரணம்..!

களுத்துறை – அளுத்கம, மொரகல்ல கடற்கரையில் நேற்று முன்தினம் மாலை நீராடச் சென்ற போது  பாடசாலை மாணவன் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

உயிரிழந்த மாணவன் 16 வயதுடைய மொஹமட் சமீன் ஆவார். அவரது சடலம்  நேற்று  பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

இவர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள சாதாரணதர பரீட்சைக்குத் தோற்ற இருந்த நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவன் மாலை தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சிலருடன் பெந்தோட்டை உல்லாச விடுதிக்கு அருகில் உள்ள கடலில் நீராடிக் கொண்டிருந்த போதே அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்  போயுள்ளார் என பெந்தோட்டை காவல்துறையினர் தெரிவித்தனர் .

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts