
பரீட்சை பெறுபேறுகள் பகிரும் மாணவர்களுக்கு ஆபத்து….
உயர்கல்வி பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் ”மாணவர்கள் தங்கள் பரீட்சை முடிவுகளை முகநூலில் பதிவிடுவதை தவிர்க்குமாறும் ஆள்மாறாட்ட மோசடி மூலம் உரிய மாணவன் விண்ணப்பத்தை நிரப்ப முடியாமல் போகும் வாய்ப்பு உள்ளதாகவும்” அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.