Tamil News Channel

பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பான அறிவிப்பு!!!

கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் அடுத்த 7 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சைக்கு மொத்தம் 346,976 பேர் தோற்றியிருந்தனர்.

இவர்களில் 281445 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 65531 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது நிறைவடைந்துள்ள சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் நான்கு மாதங்களின் பின்னர் வெளியிடப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts