Tamil News Channel

பற்றாக்குறையாகும் சத்திர சிகிச்சை நிபுணர்கள்…!!

surgery

இதய சத்திர சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளின் காத்திருப்பு காலம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலை, கராப்பிட்டி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இருதய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆனால், நாட்டில் குறைந்த எண்ணிக்கையிலான இருதய சத்திரசிகிச்சை நிபுணர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் இருப்பதால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்புப் பட்டியலில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது.

இதற்கமைய சில வைத்தியசாலைகளில் காத்திருப்போர் பட்டியல் 2029 ஆம் ஆண்டு வரை நீடிக்குமெனவும், இது தொடர்பில் அவதானம் செலுத்தி அரச மற்றும் தனியார் துறையினருடன் இணைந்து சத்திர சிகிச்சைத் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts