வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, புத்தளம் முதல் பொத்துவில் வரை, குறிப்பாக கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு நிலவக்கூடும்.
காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், கடல் அலைகளின் உயரம் 2.5 முதல் 3 மீட்டர் வரை உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கடல் கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும், அலைகள் நிலத்தைக் கடக்கக்கூடிய சூழ்நிலை உருவாகக்கூடும் என்பதையும் திணைக்களம் குறிப்பிடுகிறது.
கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகங்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.



