இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பெரிய வெள்ளி அனுஷ்டிக்கப்படுகிறது.

கிறிஸ்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும்.

இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற நாள்.

இதற்கமைய, இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும், விசேட ஆராதனைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை நாட்டில் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு இன்று பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினமும் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here