Tamil News Channel

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றதா??

uni

தமது கோரிக்கைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் நேற்று கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்த நிலையில் இக் கலந்துரையாடலில் சாதகமான தீர்வு எட்டப்பட்டதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த தெரிவித்துள்ளார்.

சம்பளத்தில் 15 வீத வெட் வரி அறவிடப்படுவது மற்றும் கல்விசாரா ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படாதமைக்கு  எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதங்களாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இதன் காரணமாக 17 அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் 17 உயர்கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் கடந்த 2 மாதங்களாக பாதிக்கப்பட்டிருந்தன.

மேலும் பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ளக மற்றும் வெளிவாரியாக கல்வி கற்கும் சுமார் 2 இலட்சம் மாணவர்கள் நெருக்கடியை எதிர்நோக்கியிருந்ததுடன் கற்றல் நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.

இதேவேளை தங்களது கோரிக்கைக்கு சாதகமான தீர்வு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts