பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று58ஆவது நாளாகவும் தொடர்கிறது.
15% சம்பளக் குறைப்பு மற்றும் மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது இப் பணிப்புறக்கணிப்புப் போராட்டம்.
இப் போராட்டம் குறித்து அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை என பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ்.பிரியந்த தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் பல்கலைக்கழகங்கள் எதிரே சத்தியாகிரகப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது என்றார்.
Post Views: 2