December 9, 2025
  வேலையில்லா பட்டதாரிகள் யாழில் வீதியில் இறங்கிப்  போராட்டம்…
புதிய செய்திகள்

  வேலையில்லா பட்டதாரிகள் யாழில் வீதியில் இறங்கிப் போராட்டம்…

Jun 10, 2024
வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னாள் நேற்று(09.06.2024) காலை கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இப்போராட்டத்தில் பட்டம் வீட்டில் பட்டதாரிகள் நடு ரோட்டில், ஒரே  ஒரு   பரீட்சையில்  பறந்து போனது பல பரீட்சை எழுதிப் பெற்ற பட்டம், படிப்பிற்க்கும் போராட்டம் வேலைக்கும் போராடுவதா? , எல்லோருக்கும் பாரபட்சமின்றி வேலைகளை வழங்க வேண்டும், படித்தவர்கள் இந்த நாட்டின் சாபக்கேடுகளா? பல வருட கனவு வெறும் கனவாகவே போய்விடுமா ? என பதாதைகளை எந்தியவாறு பட்டதாரிகள் போராட்டத்தை மேற்கொண்டனர்.
அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன்
மேலும் தமது கோரிக்கைகளை அரசாங்கம் விரைந்து நிறைவேற்ற வேண்டுமென்றும் இல்லையேல் தொடர்ந்து தாம் பாரிய போராட்டங்களை நடாத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *