மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
திடீர் சுகவீனம் காரணமாக பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அனுமதிக்கும் முன்னரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த வினோஜ்குமார் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்