மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் 4ஆவது நாளாக வேலைநிறுத்தப்
மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் (05) மேற்கொண்டு வருகின்றனர்
இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்து கொண்டு எம்மை ஏமாற்றாதீர்கள் கிழக்கு பட்டதாரிகளை புறக்கணிக்காதீர்கள் என வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் காந்திபூங்கல்லில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
பட்டதாரிகள் தெருவில் நின்றால் நாடு எப்படி முன்னேறும், நாங்கள் எப்பொழுது வாழ்வோம் என்று
கோஷங்களை எழுப்பியவாறு இன்று நான்காவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை ஆர்ப்பாட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்குச் சென்று ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளை செவிமடுப்பதாகவும் பாராளுமன்றத்தில் பேசுவதாகவும் தெரிவித்தார்.
என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.