November 18, 2025
பக்தர்கள் படை சூழ தேரில் பவனி வந்த  நயினை அம்மன்!!!
புதிய செய்திகள்

பக்தர்கள் படை சூழ தேரில் பவனி வந்த நயினை அம்மன்!!!

Jun 20, 2024

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தேர்த்திருவிழா இன்று பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் சூழ இடம்பெற்றுள்ளது.

கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று மாலை சாந்தி கிரியைகள் நடைபெற்றதுடன் இன்று அதிகாலை பூஜை வழிபாடுகளை தொடர்ந்து தேர் திருவிழா இடம்பெற்றுள்ளது.

15 நாட்களுடன் ஆரம்பமான மகோற்சவ திருவிழாக்கள் இன்று தேர் திருவிழா நடைபெற்று நாளை வெள்ளிக்கிழமை தீர்த்த திருவிழா இடம்பெற்று மாலை கொடியிறக்கத்துடன் மகோற்சவ திருவிழாக்கள் நிறைவு பெறவுள்ளது.

அத்துடன் அமுதசுரபி அன்னதான மடத்தில் பக்கதர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுவருகின்றன. தேர் திருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , புலம்பெயர் நாடுகளில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை வணங்கி அருளாசிகளை பெற்றுக்கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *