விரைவில் 35 அண்ட்ராய்டு (Android) மற்றும் ஐ.ஒ.எஸ் (IOS) கையடக்க தொலைபேசிகளில் இருந்து வாட்ஸப் செயலியின் சேவை நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸப் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்ற நிலையில் இந்த செயலியில் அவ்வப்போது புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன.
இருப்பினும், அவ்வப்போது பழைய கையடக்க தொலைபேசிகளில் இருந்து அதன் சேவையை நீக்கி வருகின்றது.
ஏனெனில், கையடக்க தொலைபேசிகளால் சேர்க்கப்படும் புதிய அம்சங்களை செயற்படுத்த முடியாமை அல்லது பாதுகாப்பு மேம்படுத்தல்களை பெற முடியாமை என்பதாகும்.
இந்நிலையிலேயே, எதிர்வரும் வாரங்களில் 35இற்கும் மேற்பட்ட அண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ் தொலைபேசிகளில் இருந்து வாட்ஸப் (WhatsApp) செயலியின் சேவை நீக்கப்படவுள்ளது.

அந்த வகையில், WhatsApp நீக்கப்படும் 35 கையடக்க தொலைபேசிகளில் Galaxy Ace Plus, Galaxy Core, Galaxy Express 2, Galaxy Grand, Galaxy Note 3, Galaxy S3 Mini, Galaxy S4 Active, Galaxy S4 Mini, Galaxy S4 Zoom ஆகியன அடங்குகின்றன.
