Tamil News Channel

பல நாள் மீன்பிடி கப்பலுடன் ஆறு (06) சந்தேக நபர்கள் கைது!

இலங்கை கடலோரக் காவல்படையினருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படையினர், இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரமபாஹு கப்பல் மூலம் சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இவ் தேடுதல் நடவடிக்கை தெவுந்தர இருந்து தெற்கு திசைக்கு சுமார் 356 கடல் மைல் (சுமார் 700 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதி வரை நடைபெற்றது.

இதன் போது சந்தேகத்திற்கிடமான பல நாள் மீன்பிடி கப்பலுடன் ஆறு (06) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் காலி துறைமுகத்தில் மேற்படி மீன்பிடி கப்பலை சோதனை செய்த போது குறித்த கப்பலின் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3250 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் 131 கிலோ 754 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்கள் 2024 ஜூன் 15 ஆம் திகதி காலி துறைமுகத்தில் குறித்த போதைப்பொருளை பார்வையிட்டார்.

போதைப்பொருளை நாட்டிலிருந்து ஒழிப்பதற்கான தேசிய அபிலாஷையை அடைவதற்காக, கடற்பரப்பை உள்ளடக்கி மிகுந்த கவனத்துடன் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் கடற்படையினரும், கரையோரப் பாதுகாப்புத் திணைக்களமும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

அதன்படி, இலங்கை கடலோர காவல்படை திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின்படி, இந்த விசேட தேடுதல் நடவடிக்கையை ஈடுபடுத்தியுள்ளனர்.

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த பல நாள் மீன்பிடி படகொன்று சோதனையிடப்பட்டதுடன் அங்கு, பல நாள் மீன்பிடிக் கப்பலில் சுமார் 30 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, 2024 ஜூன் 06 ஆம் திகதி ஆறு (06) சந்தேக நபர்களுடன் இக் கப்பல் கைது செய்யப்பட்டு, மேலதிக சோதனைக்காக 2024 ஜூன் 14 அன்று காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நடவடிக்கையின் மூலம், கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள், ஆறு சந்தேக நபர்கள் (06) மற்றும் பல நாள் மீன்பிடி கப்பல் (01) ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

இச் சம்பவத்துடன் சந்தேக நபர்கள் 23 முதல் 43 வயதுடைய தேவுந்தர மற்றும் கந்தர பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டது.

மேலும், மீன்பிடி என்ற போர்வையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் மற்றும் அதற்கு ஆதரவான நபர்கள் பற்றிய தகவல்களை கடற்படை மற்றும் நாட்டின் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களுக்கு வழங்கவும், நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு ஆதரவளிக்கவும் இலங்கை கடற்படை பொதுமக்களிடம் வலியுறுத்துகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts