கொழும்பின் பல பகுதிகளில் நாளைய தினம்(09) நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களுக்கு நாளை மாலை 5 மணி முதல் நாளை மறுதினம் (11) காலை 8.00 மணி வரை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பத்தல நீர் வழங்கல் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாகவே நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.