- மஞ்சள் சீரம்
முதலில் தேங்காய் எண்ணெயை எடுத்து அதில் மஞ்சள் தூளைச் சேர்த்து கலந்து ஒரு கொள்கலனுக்கு மாற்ற வேண்டும்.
பின் சருமத்தில் 15 நிமிடங்கள் வைத்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.
- எலுமிச்சை சீரம்
சம அளவு எலுமிச்சை சாறை ரோஸ் வாட்டருடன் சேர்த்து இதனுடன் சில துளிகள் வைட்டமின் ஈ எண்ணெயைச் சேர்க்கவும்.
இதை கண்ணாடி பாட்டிலில் சேமித்து இரவு படுக்கைக்கு முன் கண் பகுதியைத் தவிர்த்து மற்ற இடங்களில் தடவலாம்.
- கற்றாழை சீரம்
கற்றாழை ஜெல்லை மென்மையாகும் வரை நன்கு கலந்து பாதாம் எண்ணெயை சில துளிகளைச் சேர்க்கலாம்.
இந்த சீரத்தைக் கண்ணாடி கொள்கலனில் மாற்றி குளிர்ச்சிக்காக குளிர்சாதப் பெட்டியில் சேமிக்க வேண்டும்.
சருமத்தை சுத்தப்படுத்திய பிறகு, இதை சிறிய அளவு தடவலாம்.
- தேன்+ எலுமிச்சை சீரம்
சம அளவு தேன் மற்றும் எலுமிச்சைச் சாற்றை கலந்து இதனுடன் அத்தியாவசிய எண்ணெயின் சில துளிகள் சேர்க்கவும்.
பின் இதனை கொள்கலனில் மாற்றி குளிர்ந்த மற்றும் இருண்ட இடத்தில் சேமிக்க வேண்டும்.
இதை சருமத்தில் 10-15 நிமிடங்கள் வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
- கிரீன் டீ சீரம்
முதலில் ஒரு கப் க்ரீன் டீயைக் காய்ச்சி, குளிர்வித்து கற்றாழை ஜெல் அல்லது கிளிசரின் சேர்த்து கலக்கவும்.
இந்த சீரத்தை கொள்கலனில் மாற்றி, குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து காலை மற்றும் இரவு நேரங்களில் சருமத்தில் தடவலாம்.