பாகிஸ்தான் கராச்சியில் அடுக்குமாடி இடிந்து விழுந்து விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு – தரமற்ற கட்டுமானம் காரணமா?
பாகிஸ்தானின் கராச்சி நகரில் இடிந்து விழுந்த பல மாடி குடியிருப்பு கட்டிடத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 27 ஆக உயர்ந்து, மூன்று நாள் மீட்புப் பணி முடிவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து மேலும் 11 உடல்களை மீட்புப் பணியாளர்கள் மீட்டதாக கராச்சி காவல்துறை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுமையா தாரிக் தெரிவித்தார்.
இது பற்றி மேலும் அவர் கூறுகையில், 10 பேர் காயமடைந்திருந்ததாகவும், அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் எனவும் கூறினார்.
இடிபாடுகளுக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், கட்டுமானத் தரநிலைகள் பெரும்பாலும் மோசமாக அமல்படுத்தப்பட்டிருப்பதாகவும், பாகிஸ்தானில் கட்டிட இடிபாடுகள் பொதுவாக நடைபெறக்கூடிய ஒரு நிகழ்வு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான காரணங்களாக, பல கட்டமைப்புகள் தரமற்ற பொருட்களால் கட்டப்பட்டுள்ளன எனவும், மேலும் செலவுகளைக் குறைக்க பாதுகாப்பு விதிமுறைகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன எனவும் தெரிய வந்துள்ளது.
இதற்கு எடுத்துக்காட்டாக, ஜூன் 2020 இல், தெற்கு சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சியில் ஒரு அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் முன்வைக்கப்படுகின்றது.
![]()