இந்தியா – பாகிஸ்தானிடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீ்பபுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இம்ரான்கான் கட்சியான பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி முடிவு செய்துள்ளது.

தெக்ரீக்-இ-இன்சாப் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பரிசீலித்து வருகிறது. இதை தெக்ரீக்-இ-இன்சாப் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் சபாநாயகருமான அசாத் கைசர் உறுதி செய்தார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதை நாங்கள் பரிசீலனையில் வைத்திருக்கிறோம். இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றங்கள் காரணமாக தற்காலிகமாக பின்வாங்கினோம். தற்போது பதற்றம் குறைந்ததால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர உள்ளோம் என்றார்.

இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்கள் சேதமடைந்ததை ஷபாஸ் ஷெரீப் சமீபத்தில் ஒப்புக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here