பாடசாலை ஒன்றின் தரம் 12 மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் மாணவர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதலில் மாணவர் ஒருவர் தன்னிடமிருந்த காகிதம் வெட்டும் கட்டர் மூலம் மற்றுமொரு மாணவனின் கையை அறுத்துள்ள நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு சென்று 7 தையல் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஹிக்கடுவ பொலிஸ் எல்லைக்குட்பட்ட வேவல கொலனியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவனே படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காகிதம் வெட்டும் கட்டரை பயன்படுத்தி வெட்டியதாகக் கூறப்படும் மாணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.