கண்டி நோக்கிச் சென்ற பாரவூர்தி ஒன்று வீதியின் எதிர் திசைக்கு திரும்ப முற்பட்ட போது நுகவெல பாடசாலைச் சந்தியில் வீதியில் பயணித்த சிலர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்தில், நான்கு பாடசாலை மாணவிகள், இரண்டு மாணவர்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஆணொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் அலதெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post Views: 2