புத்தளம் – ஆனமடுவ பகுதியில் பாடசாலைக்கு முன்பாக வீதியை கடக்க முயன்ற போது, லொறி மோதி மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆனமடுவ – ரதனபால தேசிய பாடசாலையில் 8ஆம் தரத்தில் கல்வி கற்கும் ஈக்ஷனா காயத்மி என்ற 13 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவி பாடசாலையில் அகில இலங்கை நடனப் போட்டிக்கான பயிற்சியில் கலந்துகொண்ட பின்னர், வீட்டுக்குச் செல்வதற்காக பேருந்தில் ஏறுவதற்கு நடைபாதை வழியாக ஓடி வந்த போதே இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.