பாதாளக் குழுக்களின் துப்பாக்கிச்சூட்டினால் இதுவரையில் 30 இற்கும் அதிகளவானோர் உயிரிழந்துள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிவிதுரு ஹெல உறுமயவின் கொழும்பு காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (27.05.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
மேலும், பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களுக்கும், மனித படுகொலைகளுக்கும் நேரடி தொடர்புண்டு என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது எனவும் சுட்டிக்காட்டினார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உள்ள பலரும் பல குற்றச்சாட்டுகலுடன் சம்மந்தபட்டவர்கள் எனவும் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.