அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து பாதாள உலக குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்குப் பாதாள உலக கும்பலிடமிருந்து கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாதாள உலக குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் சிலரின் பெயர்கள் பட்டியல்படுத்தப்பட்டு அவர்களுக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், பாதாள உலக குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது.
விசேடமாக நாடளாவிய ரீதியில் உள்ள சட்டவிரோதத் துப்பாக்கிகள் அனைத்தும் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டு விசாரணைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என தெரிவித்தார்.