பாதாள உலக கும்பலைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் காரர் ஒருவர் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கல்கிஸ்ஸை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 40 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் இராணுவ வீரர்களின் சீருடைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் காரர்களான எல்டோ டர்மே மற்றும் இரத்மலானை குடு அன்ஜூ ஆகியோருக்கு சொந்தமான போதைப்பொருட்களை பல்வேறு பிரதேசங்களில் விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.