Wednesday, March 11, 2026

பாரவூர்தி – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞன் உயிரிழப்பு..!

Must Read

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பளை, கரந்தாய் பகுதியில் நேற்றைய தினம் (14.03.2025) நள்ளிரவு 11.50 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த பாரவூர்தியும்  கிளிநொச்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் பளை, வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த 23 வயதுடைய மகேந்திரன் நிசாந்தன் என்னும் இளைஞன் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க பளை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

[கிளிநொச்சி  நிருபர் – ஆனந்தன்]

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

Cardi B Deletes Instagram After Social Media Backlash Over Her Historic Grammys Win

 The main thing that you have to remember on this journey is just be nice to everyone and always...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img
Verified by MonsterInsights