பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேலையில் கிளிநொச்சியிலும் சுமுகமான முறையில் இடம்பெற்று வருகின்றது என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் 30.10.2024 இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
பொலிஸார் தமது தபால் மூல வாக்குகள் வாக்களிக்க விசேட தினமாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி பொலிஸார் தங்களது தபால் மூல வாக்குகள் கிளிநொச்சி மாவட்ட செயலகம், பொலிஸ் தலைமையக பொலிஸ் நிலையம் மற்றும் பிரதேச பொலிஸ் நிலையங்களில் வாக்களிக்கின்றனர்.
அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்களிக்க 3955 பேர் தகுதி பெற்றுள்ளதுடன் அந்த வகையில் ,இன்று மாவட்டச் செயலகம் பொலிஸ் திணைக்களம், தேர்தல் திணைக்களம் மற்றும் பிரதேச செயலகங்கள் இன்று தபால் மூலம் வாக்களிப்பு செய்தார்கள் ஏனைய தபால் மூல வாக்களிப்பு நவம்பர் மாதம் 4ஆம் திகதி தங்களின் வாக்குகளை பதிவு செய்ய உள்ளார்கள் என இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.