பப்புவா நியூ கினியாவில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2, 000 ஆக உயர்வடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இதுவரையில் 150 வீடுகள் வரை மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் பப்புவா நியூ கினியாவில் வடக்கேயுள்ள எங்கா பிராந்திய மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்குண்டு 100 பேர் உயிரிழந்ததாகவும் இந்நிலையில், நேற்றைய தினம் குறித்த எண்ணிக்கை 670 ஆக அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
நிலச்சரிவில் புதையுண்டவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் 4,000 பேர் வரை வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.