திவுலப்பிட்டி – நீர்கொழும்பு வீதியில் துனகஹா நகரில் பாரவூர்தி ஒன்றும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொதிகமுவ பகுதியில் இருந்து துனகஹா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று திவுலப்பிட்டியிலிருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த பாரவூர்தி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தின் போது முச்சக்கரவண்டியில் நான்கு பேர் பயணித்துள்ளதாகவும் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்ற இருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.