இந்தியாவில் அமேசனில் பொருட்கள் ஓடர் செய்தவருக்கு பார்சலில் விசப்பாம்பு அனுப்பிவைக்கப்பட்ட சம்பவம் வாடிக்கையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆடை அணிகல.ன்கள் முதல் சாப்பாடுவரை தற்போது பெரும்பாலானவர்கள் ஒன்லைன்தான் கொள்வனவு செய்கின்றனர். அந்தவகையில் உலகம் முழுவது பிரபலமானது அமேசன் தளம் ஆகும். இந்நிலையில் இந்தியாவின் பெங்களூரில் உள்ள வாடிக்கையாளர் ஒருவர் அமேசன் தளத்தில் பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.
மென்பொருள் பொறியாளர்களான தம்பதியினர், ஆன்லைனில் எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்திருந்த நிலையில் வீட்டிற்கு வந்த பார்சலை வாடிக்கையாளர் ஆர்வமுடன் திறந்தபோது அதற்குள் விஷப் பாம்பு உயிருடன் இருப்பதைக் கண்டு அதிச்சியடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.