பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட 346 ரயில் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட ரயில் முந்தைய நாள் மதியம் பலுசிஸ்தான் மாகாணத்தில் 400 பயணிகளுடன் கடத்தப்பட்டது.
பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தது.
கடத்தலை நடத்திய பலுசிஸ்தான் பிரிவினைவாதிகள், அரசியல் கைதிகள் குழுவை 48 மணி நேரத்திற்குள் விடுவிக்காவிட்டால், பயணிகளுடன் ரயிலை வெடிக்கச் செய்வோம் என்று அறிவித்திருந்தனர்.
இருப்பினும், பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் தொடங்கப்பட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, ரயில் பயணிகள் மீட்கப்பட்டனர்.
ரயிலைக் கைப்பற்றிய 33 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 27 பணயக்கைதிகளும் கொல்லப்பட்டனர்.