பிமல் ரத்நாயக்கவிடமிருந்து போக்குவரத்து அமைச்சு பொறுப்பு நீக்கம்: ராசமாணிக்கம் சாணக்கியன் வரவேற்பு!
அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடமிருந்து துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து பொறுப்பை நீக்குவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எடுத்துள்ள தீர்மானத்தை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் வரவேற்றார்.
அமைச்சருடன் தொடர்புடைய கொள்கை மோசடி குற்றச்சாட்டுகள் அடிப்படையில் இது அவசியமான நடவடிக்கை என அவர் குறிப்பிட்டார். அதே நேரத்தில், இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் தாமதமாகி வரும் மேம்பாட்டுத் திட்டங்களை விரைவுபடுத்த புதிய அமைச்சருடன் ஆக்கப்பூர்வமாக பணியாற்ற அவர் ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இன்று அறிவிக்கப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் பின்னர், பிமல் ரத்நாயக்க மீண்டும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
![]()