பியகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மல்வான பகுதியில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாவந்தகல பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் 32 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சந்தேக நபர், கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்துள்ளதாகவும், இருவரும் வசித்து வந்த வாடகை வீட்டில் வைத்து இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவகின்றனர்.