Tamil News Channel

பியூமியின் அழுகுசாதனப் பொருட்கள் தொடர்பிலும் விசாரணை….

piumi

சட்டவிரோதமான முறையில் குறுகிய காலப்பகுதிக்குள் கோடிக்கணக்கான சொத்துக்களை சேகரித்து வைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை மொடல் அழகியான பியூமி ஹன்சமாலி நடத்தி வரும் அழகுசாதனப் பொருட்களின் உற்பத்தி, அவருடைய நிறுவனம் மூலம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து இரகசியப் பொலிஸ் பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கப்படும் இடங்கள் குறித்த தகவல்களைக் கண்டறிய இரகசியப் பொலிஸார் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக பியூமி ஹன்சமாலி நடாத்தி வரும் இந்த வணிகத்தின் வருமான வரி செலுத்துதல் மற்றும் வணிகத்தின் கணக்குகள் குறித்தும் இதே பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மொடல் அழகி பியூமி ஹன்சமாலி நடத்தி வரும் இந்த வியாபாரம் நிறுவன பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான தகவல்களும் அந்த அலுவலகம் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் இரகசிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் , கொண்டுவரப்பட்ட தகவல்கள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் இரகசிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts