பிரதிபொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை..!!
முன்னாள் பிரதிபொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட 6 பேருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை உயர்நீதிமன்றம் இன்று (08.08) உறுதி செய்துள்ளது.
2013 ஆம் ஆண்டு தொழிலதிபர் மொஹமட் ஷியாம் கடத்தப்பட்டு கொலை செய்தமை தொடர்பில் முன்னாள் பிரதிபொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தன அவரது மகன் ரவிந்து குணவர்த்தன மற்றும் 4 பொலிஸ் அதிகாரிகள் என ஆறு பேருக்கு நீதிமன்றம் மரண தண்டனையை விதித்திருந்தது.
இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் அந்த மனுக்களை தள்ளுபடி செய்துள்ளதுடன் மரண தண்டனையை உறுதி செய்துள்ளது.
![]()