Tamil News Channel

பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா இலங்கைக்கு விஜயம்..!

vijai1

பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா படப்பிடிப்பிற்காக இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

தற்போது, விஜய் தேவரகொண்டா தனது 12-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘விடி12’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை ‘ஜெர்சி’ படத்தின் மூலம் பிரபலமான கவுதம் தின்னனுரி இயக்குகிறார். கதாநாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் வைசாக்கில் ஒரு மாத காலமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்துள்ளது. தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு இலங்கை வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இங்கு படத்தின் முக்கியமான காட்சிகளை படமாக்க உள்ளதாக தெரிகிறது. அதன்படி, இந்த வாரம் படக்குழுவினர் இலங்கைக்கு புறப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

கதை மற்றும் கதாபாத்திரங்கள் பற்றிய கூடுதல் தகவல்களை அறிய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts