ஷான் புத்தா எனப்படும் இலங்கையின் பிரபல ரெப் இசை பாடகர் துப்பாக்கியுடன் நேற்றையதினம் கைது செய்யப்பட்டார்.
மீகொடை அரலிய உயன பகுதியில் வைத்து 9 மில்லி மீட்டர் துப்பாக்கியுடன் நேற்று கைது செய்யப்பட்டார்.
இவருக்கு துப்பாக்கி வழங்கியதாகக் கூறப்படும் மன்னார் காவல் நிலையத்தில் பணியாற்றும் கான்ஸ்டபிள் ஒருவரும் குறித்த பாடகரின் முகாமையாளரும் இதன் போது கைது செய்யப்பட்டனர்.
சந்தேகத்திற்குரிய கான்ஸ்டபிள் மாத்தறை, கொட்டவில காவல் நிலையத்தில் கடமையாற்றிய போது இந்த துப்பாக்கி திருடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மேலதிக விசாரணைக்காக மூன்று சந்தேக நபர்களையும் ஏழு நாட்கள் கொட்டவில காவல் நிலையத்தில் தடுத்து வைக்க மாத்தறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Post Views: 2