July 14, 2025
பிரமாண்ட முறையில் நடந்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்
News News Line Top புதிய செய்திகள்

பிரமாண்ட முறையில் நடந்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்

Jan 22, 2024

அயோத்தி  ராமர்  கோவில்  கும்பாபிஷேகம் இன்று (22) பிரமாண்டமான  முறையில்  மிகவும்  கோலாகலமாக நிறைவடைந்துள்ளது.

பிரதமர்  நரேந்திர  மோடியினால்  சமய  சடங்குகள் செய்யப்பட்டதுடன்  கும்பாபிஷேகம்  நடத்தப்பட்டது.

இதையடுத்து  பால  ராமரின்  கண்  திறக்கப்பட்டது.

கடந்த  18ஆம்  திகதி  கோவில்  கருவறையில்  5 வயதான  குழந்தை பருவ ராமர் சிலை நிறுவப்பட்டது.

இந்த  சிலையே  இன்று  பிரதிஸ்டை  செய்யப்பட்டது.

கோயில்  கருவறையில்  உள்ள  சிலைக்கு  இன்று  அர்ச்சகர்கள்  பூசை, சடங்குகள்  செய்தனர்.

மேலும்  பிரதமர்  மோடி  12.05  மணியளவில்  கோவிலுக்குள்  வந்த நிலையில்  கும்பாபிஷேகம்  மதியம்  12.15  முதல்   12.45 மணிக்குள் நடைபெற்று  முடிந்தது.

இந்த நேரத்தில்  பால ராமர்  சிலைக்கு  பிரதிஸ்டை  சடங்குகள் செய்யப்பட்டு  கும்பாபிஷேகம்  நடந்து முடிந்தது.

ராமர் சிலை  பிரதிஸ்டை  செய்யப்பட்ட  போது  ஆலயத்தில் திரண்டிருந்த  சுமார்  8  ஆயிரம் சிறப்பு  அழைப்பாளர்களும் பார்ப்பதற்கு வசதியான ஏற்பாடுகள்  செய்யப்பட்டு  இருந்ததுடன் பல இடங்களில்  அகன்ற  திரைகள்  வைத்து ஒளிபரப்பு  செய்யப்பட்டது.

தொடர்ந்தும் 12.30 மணிக்கு பிராண பிரதிஷ்டை நடந்தபோது உலங்கு வானூர்தியில்  இருந்து  அயோத்தி  ராமர்  ஆலயம் மீது பூ மழை பொழியப்பட்டது.

மதியம்  சுமார்  ஒருமணி  நேரம்  வரை  கருவறை  பூஜைகள் நடைபெற்றன.

பிரமாண்டமான  அயோத்தி  ராமர்  கோயில்  திறப்பு  விழாவிற்கு ஏராளமான  பிரபரலங்கள்  வந்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *