சட்டவிரோதமான முறையில் பிரமிட் முதலீட்டுத் திட்டத்தை செயற்படுத்தி 1. 5 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஸ்மார்ட்வின் எனும் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான மூவரும் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட பின்னர் அவர்களை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வல்லப்பட்டை மரநடுகை திட்டத்தை முன்னெடுப்பதாக தெரிவித்து ஒவ்வொரு செடிக்கும் தலா 30,000 ரூபாவை பெற்றதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், குறித்த நிறுவனம் இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி சட்டவிரோதமாக செயற்பட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.