November 14, 2025
பிரான்ஸிலிருந்து  சுற்றுலா வந்தவர் திடீர் மரணம்..!
News News Line Top Updates புதிய செய்திகள்

பிரான்ஸிலிருந்து சுற்றுலா வந்தவர் திடீர் மரணம்..!

Mar 25, 2024

பிரான்ஸ் நாட்டில் இருந்து திருகோணமலைக்கு சுற்றுலா வந்த நபரொருவர் இன்று (25) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 57 வயதுடைய மைக்கல் மார்சல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும்  கடந்த 18 ஆம் திகதி மனைவி உட்பட 44 பேருடன் சுற்றுலா வந்ததாகவும்  திருகோணமலை – அலஸ் தோட்டம் பகுதியில் உள்ள விடுதியொன்றில் நேற்றிரவு தங்கியிருந்த போது திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து 1990 அவசர அம்பியூலஸ் வண்டி மூலம் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் தெரிய வருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மரணம் தொடர்பிலான விசாரணைகளை உப்பு வெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *