பிரான்ஸின் தலைநகரான பாரீஸில் அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த அடுக்குமாடி குடியிருப்பின் 7வது தளத்திலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இதில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
இதனையடு்த்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை முற்று முழுதாக அணைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு கசிவு காரணமாக குறித்த தீ விபத்து இடம்பெற்றிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.



